இரண்டு குழந்தைகளும் மாடிப்படிக்கட்டின் கைப்பிடிச்சுவரில் சறுக்கியபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். வழக்கம்போல ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையில் வாதம் தொடங்கியது.
“போடி, எங்கப்பா நெனச்சாருன்னா டயனோசரையே வேட்டையாடுவாரு,” என்றான் சிறுவன். கிராமத்தில் அவன் அப்பத்தா வீட்டின் ஹாலை யானைத் தந்தங்கள் அலங்கரித்திருந்தன. விடுமுறைக்கு அவன் அங்கே செல்லும்போதெல்லாம் அவன் தாத்தாவின் தாத்தா வேட்டைக்குச் சென்று மிருகங்களைக் கொன்று குவித்ததைப் பற்றிக் கதைகதையாகச் சொல்வாள் அப்பத்தா.
“நாங்க வேட்டைப் பரம்பரை” என்று முகத்தை உயர்த்திச் சொன்னான்.
“எங்கப்பாவும்தான்” என்று பதில் சொன்னாள் சிறுமி. “நான் கேட்டா பறிச்சிட்டு வந்து தருவாரு”
“என்னத்தத் தருவாரு?”
“மேலே நெலா, நட்சத்திரம் எல்லாத்தையும் பறிச்சிட்டு வந்து தருவாரு”
“தந்து?”
“அத நான் பூக்கட்டி வச்சிப்பேன்” என்றாள் வீம்பாகச் சிறுமி.
“நட்சத்திரத்த எப்டிறீ பூக்கட்டி வச்சிப்பே?” சிரித்தான் சிறுவன்.
“அதெல்லாம் கட்டி வச்சிக்கலாம்டா” என்றாள் சிறுமி. “அதெல்லாம் கட்டி வச்சிக்கலாம்டா” என்று அவளை மாதிரியே பேசி அழகுகாட்டினான் சிறுவன். ”போடா” என்று அழுகைக்குத் தயாரான முகத்தோடு தன் வீட்டுக்குள் ஓடிப் போனாள் சிறுமி. “என்னோட அப்பா டயனோசரை விடப் பெரீய டயனோசரை அடிச்சி இழுத்துட்டு வருவாரு. அதோட பல்லுங்கள நான் பூக்கட்டி வச்சிப்பேன்” என பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று சிறுமிக்குத் தோன்றியது. அப்படித் தனக்குச் சொல்லத் தோன்றாததை எண்ணி அவளுக்கு அழுகையாய் வந்தது.
*
I see two things at play in this story. The strikingly obvious theme is one that every adult will recognize. When we lack the presence of mind to come up with something funny, sharp, or cutting in the heat of a moment, we replay that embarrassing scene long after we’ve left the room, trying on all the responses we could have given. By placing this scenario in the world of children, Perundevi holds up a mirror to us – and makes visible just how childish the need to get even really is.
The second aspect is that the boy displays, (as one would expect from a boy?) his competitive spirit, the aggressive physicality of tackling a dinosaur, his family heritage – “நாங்க வேட்டைப் பரம்பரை” என்று முகத்தை உயர்த்திச் சொன்னான் – all into play. The girl responds (maybe like a typical girl?) from a different place entirely – the beauty of the moon and a garland of stars. These are not equivalent boasts and they’re equally absurd. She is playing a gentle and poetic game; he is playing a physical and aggressive game. And yet, when she’s distressed and ruminating, the only comeback she can arrive at is to beat him on his own terms – that her father would have hunted a bigger dinosaur. She has abandoned her world to try to win in his.
Whether Perundevi is making a pointed observation about how women are compelled to play by men’s rules – in workplaces, in arguments, in public life – feels less like an open question.